தங்களை அன்புடன் வரவேற்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்..... வருக! வருக!! வருக!!!...

August 26, 2009

பெண்களுக்கு ரோபோ பெண் மாடல் சவால்


அவளை மண்ணில் வந்த நிலவு, தரையில் நடக்கும் பட்டாம்பூச்சி என்றெல்லாம் வர்ணிக்காத குறைதான் அவள் உருவை, அவள் முகப்பொலிவை, அவள் நடையை, அவள் பின்னிடையை சுற்றி சுற்றி வந்து புகைப்படக்காரர்கள் சுட்டுக் கொண்டார்கள். பிறர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தடுமாறாமல் சிரித்தபடியே அவள் பதிலளித்தாள். மேடையில் தளிர் நடை போட்டாள்.

யார் அவள்?

அவள்… HRP-4C என்று பெயரிடப்பட்ட ரோபோ பெண்.

ஜப்பானியர்கள் எதையும் முனைப்புடன் செய்பவர்கள். அதையும் முந்திக்கொண்டு செய்பவர்கள்.
HRP-4C என்கிற இந்த ரோபோ பெண்ணை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டி வித்தியாசமாக, முதன்முதலாக ரோபோ பேஷன் ஷோ ஒன்றையே நடத்தி விட்டார்கள் ஜப்பானில் . 158 செண்டிமீட்டர் உயரத்தில், நவீன பெண் மாடல் போல 43 கிலோ கிராம் எடையில் மேடையேறியது ரோபோ பெண். சில்வர் மற்றும் கருப்பு தேகம்.

மேடையேறியதும் சுற்றுமுற்றும் பார்வையை வீசிய அது அடுத்த நொடி ஜப்பானிய முறையில் அனைவருக்கும் தனது வணக்கத்தை தெரிவித்தது. அப்புறம் என்ன… ஐஸ்வர்யா ராய் கெட்டார் போங்கள் அந்த அளவுக்கு மேடையில் அசத்தலாக பூனை நடை நடந்தது அது.

50 மீட்டர் தூரத்திற்குள் ஒலித்த ஒலி எல்லாம் (ப்ளுடூத் தொழில் நுட்பம் மூலம்) அதன் காதில் விழுந்தன. அதன் உடலில் அ மைக்கப்பட்டுள்ள 42 உணர்வு மையங்கள் மூலம ஒரு பெண்ணைப் போலவே அது உணர்வுகளை வெளி்ப்படுத்தியது.



சிரித்து, நெகிழ்ந்து, கண்களில் ஆச்சரியம் தாங்கி… ஆகா என்ன ஒரு கண்டுபிடிப்பு. தன்னுடைய பின்னழகை விழுந்து விழுந்து புகைப்படம் எடுத்தவர்களை அது அழகாக முறைத்தது. பார்வையாளர்கள் எல்லாம் சில மணித் துளிகள் இவ்வுலகில் இல்லை.

‘என்கிட்டே மோதாதீங்க!’ என்று அது பெண்களிடம் சவால்விடாதது தான் பாக்கி.

என்னவொன்று, இந்த ரோபோ பெண்ணை செய்ய 14 கோடி ரூபாய்தான் ஆகும். உங்களுக்கு வேண்டுமா என்று கேட்கிறார் இதை உருவாக்கிய ஷூஜி கஜிடா.

No comments: