பன்றி காய்ச்சல் பரவுவது எப்படி? |
பன்றி காய்ச்சல் "சுவைன் புளூ" என்ற வைரசால் பரவுகிறது. இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது."சுவைன் புளூ" வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர். இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது. வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும். இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும். நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும்.நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும்.எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும். பன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918 - ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது. இந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது.வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும். பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918 - ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள். 1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள். நோய் அறிகுறிகள் நோய் அறிகுறிகள் * இடைவிடாத காய்ச்சல் * மூக்கில் நீர்வடிதல் * தொண்டையில் வலி * வயிற்று போக்கு * மயக்கம் * மயக்கம் * பசியின்மை * சளி தொல்லை * சாப்பாடு மீது வெறுப்பு * வாந்தி எடுத்தல் |
July 22, 2009
பன்றி காய்ச்சல் பரவுவது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment