மைக்கேல் ஜாக்சன் வைரஸ் உஷார் |
மைக்கேல் ஜாக்சன் எத்தனை பெரிய மனிதர் என்பதை இன்டெர்நெட் தெளிவாகவே புரிய வைத்துள்ளது. ஜாக்சன் மறைவை அடுத்து தேடல் உலகில் ஜாக்சன் தொடர்பான பதங்களே அதிக அளவில் தேடப்பட்டு வருகின்றன.முதல் நாள் அன்று இது உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக இண்டெர்நெட் முடிங்கிப்போகும் நிலை உண்டானது. தொடர்ந்து ஜாக்சனே அதிகம் தேடப்படும் பெயராக இருக்கிறார். அது மட்டும் அல்ல ஜாக்சனின் பாடல்களும் அதிக அளவில் டவுண்லோடு செய்யப்பட்டு கேட்கப்படுகின்றன. ஜாக்சனுக்கு பெரும் புகழ் தேடித்தந்த திரில்லர் ஆல்பம் இது வரை 26 லட்சம் முறை டவுண்லோடு ஆகியிருக்கிறதாம். ஜாக்சன் நினைவாக பல இனையதளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஜாக்சன் மோகத்தை பயன்படுத்திக்கொண்டு வைரஸையும் கட்டவிழ்த்துவிட்ட்டுள்ளனர். ஆம் ஜாக்சனை நினைவு கூறுவோம் என பொருள்பட ஒரு இமெயில் உலா வருகிறதாம்.இந்த மெயில் உண்மையில் ஒரு வைரஸ்.இதனை கிளிக் செய்தால் விபரீதம் ஏற்படலாம். ஜாக்சன் மீதான கவனத்தை பயன்படுத்திக்கொண்டு விஷமத்தனம் செய்யும் இந்த வைரசிடம் எச்சரிக்கையாக இருக்கவும். |
July 22, 2009
மைக்கேல் ஜாக்சன் வைரஸ் உஷார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment