தங்களை அன்புடன் வரவேற்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்..... வருக! வருக!! வருக!!!...

July 27, 2009

2 புதிய வீடியோ கேமரா: சோனி அறிமுகம்

அதிதுல்லியமாக படம் பிடிக்கக் கூடிய 2 புதிய வீடியோ கேமராக்களை சோனி இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பிடிக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை உடனுக்குடன் கணினி அல்லது பென் டிரைவ்களில் பதிவிறக்கம் செய்து, டிவிடி அல்லது சிடிக்களாக உருவாக்கிக் கொள்ளலாம்.

HDR-SR10E மற்றும் HDR-HC9E எனப் பெயரிடப்பட்டுள்ள 2 வீடியோ கேமராவிலும், 40 ஜிபி உள்ளீட்டு நினைவகத் திறன் (Internal Memory) உள்ளதால், தொடர்ச்சியாக 5 மணி நேரத்திற்கு வீடியோ காட்சிகளை படம் பிடிக்க முடியும் என்பது இவற்றின் கூடுதல் அம்சம்.

இவற்றின் விலை இந்திய மதிப்பில் ரூ.49,990 மற்றும் ரூ.59,990 (HDR-HC9E HD) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சோனி நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம் எஸ் என்

No comments: